பிரதான செய்திகள்

நாளை வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையம் பூட்டு

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்தக நிலையங்களையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன அறிவித்துள்ளார்.


வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.


இந்த நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எனவே நகரின் அனைத்து பகுதிகளையும் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதற்கு அமைவாகவே வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகள் என்பன நாளைய தினம் பூட்டபட்டிருப்பதுடன், பொதுப் போக்குவரத்தும் இடம்பெறாது என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

சஜித் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலி உருவாகும்

wpengine

மட்டக்களப்பு சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம்

wpengine

சவுதி அரேபிய நாடாளுமன்றத்தின் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

wpengine