கொரோனா வைரஸ் காரணமாக மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவில்லை என்றால், தேர்தல் நடத்தப்படும் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் தேர்தல் நடத்தப்படும் தினம் அறிவிக்கப்பட மாட்டாது என்றே தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்தப்படும் தினத்தை அறிவிக்காவிட்டால், நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 113வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்.