Breaking
Mon. Nov 25th, 2024

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


இந்த மாவட்டங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


அதன் பின்னர் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது தொடர்பில் 20ஆம் திகதி 6 மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இன்றைய தினம் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் மாத்திரம் கொள்வனவு செய்யுமாறும், அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் நகரங்களுக்கு வரும் போது வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வரவேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


முக கவசம் அணியாமல் வரும் நபர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்பட்ட காலப்பகுதியில் வீதியில் தொடர்ந்து பயணிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *