பிரதான செய்திகள்

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

கிராமிய மட்டத்திலான புத்தாண்டு கொண்டாட்டங்களையும் தடை செய்யுமாறு பதில் காவல்துறை மா அதிபர், சகல காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


கிராமிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளையும் தடை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நகர மட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடாத்த முடியாத காரணத்தினால், கிராமிய மட்டத்தில் அவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்துமே மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியது எனவும் இதனை மக்கள் புரிந்து கொண்டு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Related posts

14ஆம் திகதி இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ள ஆளுநர்

wpengine

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine

குலவிளக்கை குறிவைத்து குப்புற விழுந்த குமரர்கள்!

wpengine