பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சுவிட்சர்லாந்து போதகர் யாழ்ப்பாண மக்கள் அவலம்

யாழ்ப்பாணம் – அரியாலை பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிட்சர்லாந்து போதகர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக நேற்று செய்தி வெளியாகியது.


இந்நிலையில் குறித்த போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட மக்கள் நேற்று முதல் தேடப்பட்டு வருகின்றது.


இவ்வாறான நிலையில் அந்த போதகருடன் நெருங்கிய செயற்பட்ட 10 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டமையினால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாக கூற முடியாத நிலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் இராணுவம், பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்த ஆராதனையில் கலந்து கொண்ட 40 பேரை அடையாளம் கண்டுள்ளனர்.


ஏனையவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ரேசிங் கார் எங்கே? யோஷித என்ன செய்தார்?

wpengine

அரசியல்வாதிகளையும்,உதவி செய்தோரையும் கௌரவித்த வவுனியா

wpengine

புத்தளம்- இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க அனுமதி! அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine