பிரதான செய்திகள்

சஜித், ஆசாத் கூட்டணி! தேசிய பட்டியல் வழங்குவதாக உறுதி

ஊடகப்பிரிவு-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவுடன், அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி கூட்டணியமைத்துள்ளது. 


இது தொடர்பில் வினவியபோது விளக்கமளித்த தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, தமது கட்சி சஜித் பிரேமதாச கூட்டணியின் வெற்றிக்காக கூட்டிணைந்து செயற்படவுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்தின் பிரச்சார நடவடிக்கைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 


கொழும்பு அல்லது கண்டியில் தான் போட்டியிட விரும்புவதாக அசாத் சாலி வேண்டுகோள் விடுத்த போதிலும், கொழும்பு மாவட்டத்தின் பிரச்சார நடவடிக்கைகளை முழுமையாகப் பொறுப்பேற்குமாறு வேண்டிய சஜித் பிரேமதாச, தேசியப் பட்டியல் ஊடான நியமனத்தை வழங்குவதற்கான இணக்கப்பாட்டினை எட்டியுள்ளதாக அறிய முடிகிறது. 


முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைந்து, தனித்துப் போட்டியிடுவதற்கு அண்மைக்காலமாக அசாத் சாலி அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதற்குச் சாதகமாக பதிலெதுவும் கிடைக்காத நிலையில், இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Related posts

மன்னார்,மடுமாதா தேவாலயம் சென்ற அமைச்சர் ஹக்கீம்

wpengine

வவுனியா மருத்துவமனையில் பாலியல் தொல்லைகொடுக்கும் வைத்தியர்.

wpengine

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு

wpengine