பிரதான செய்திகள்

மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம் தவிர்ந்து மேலும் 3நாள் பொதுவிடுமுறை

விசேட பொதுவிடுமுறையை மேலும் 3 நாட்களுக்கு இலங்கை அரசாங்கம் நீடித்துள்ளது.


இதன்படி, 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 19 ஆம் திகதி வியாழக்கிழமை வரை இந்த பொது விடுமுறை அமுலில் இருக்கும் என அரசாங்கம் திங்கள் இரவு அறிவித்துள்ளது.


எனினும், இந்த 3 நாள் பொதுவிடுமுறையானது சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள், வங்கி, மாவட்ட செயலகங்கள், மற்றும் பிரதேச செயலங்களுக்கு செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேற்படி துறைகள் தவிர்ந்த ஏனைய திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்களுக்கு இந்த விடுமுறை அமுல்படுத்தப்படும்.


அதேவேளை, இந்த 3 நாள் விடுமுறையை வழங்குமாறு தனியார் துறையினரிடமும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 16 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைத் தினமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

wpengine

துருவங்களாகும் இருமுனைச் சித்தாந்தங்கள்

wpengine

விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ)

wpengine