பிரதான செய்திகள்

பொதுவிடுமுறை நாட்களை நீடிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

பொதுவிடுமுறை நாட்களை நீடிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டின் ​​நிலைமையைக் கண்காணித்த பின்னர் பொதுவிடுமுறையை நீடிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இப்போதைக்கு பொது விடுமுறை நீட்டிக்கப்படாது. தேவைப்பட்டால் அது தொடர்பில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்று இலங்கையில் அரச பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

மைத்திரியிடம் மாட்டிக்கொண்ட மஹிந்த! சீட்டு பொன்சேகா

wpengine

டிக்கெட் விலை உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

wpengine

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ்

wpengine