பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னிக்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெயர் விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்களில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர் களமிறங்கவுள்ளதுடன், ஒருவர் அரசியலுக்கு புதுமுகமாக களமிறங்கவுள்ளார்.


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள 9 பேரினதும் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.


அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் அதிபர் க.சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.


இதில் மூன்று மாகாணசபை உறுப்பினர்களுக்கும், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னாள் அதிபரான க.சிவலிங்கம் மாத்திமே அரசியலுக்கு புதுமுகமாக களமிறங்கியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி,பிரதமர் பதவிகளை பெற நூல் சூழ்ச்சி தேவையில்லை

wpengine

கறுப்­புப்­பட்டி அணிந்து சபைக்கு சென்ற லாபிர்

wpengine

மஹிந்தவின் காரியாலயத்தில் கடமையாற்றிய விமானப் பணிப்பெண்ணுக்கு 15 லட்சம் விமானப் பயணக் கொடுப்பனவு

wpengine