இடம்பெயர்ந்து வாழும் வன்னி வாக்காளர் தொடர்பாக
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் புத்தளம், அநூராதபுரம், கொழும்பு போன்ற இடங்களில் வாழ்கின்றார்கள்.
இவ்வாக்காளர்கள் 2010 ஆண்டு வாக்காளித்ததைப்போன்று கொத்தனி வாக்கு சாவடிகளில் வாக்காளிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
அதனடிப்படையில் இவ்வாக்காளர்கள் வாக்காளிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கக்கிழமை 09.03.2020 தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட வேண்டியுள்ளது.
எனவே,அதனடிப்படையில் அவ்விண்ணப்பங்களை பூரணப்படுத்தி எப்பிரதேசத்தில் வசிக்கின்றார்கள் என கிராம சேவையாளரினால் உறுதிப்படுத்தல் வேண்டும் .
எனவே இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரினால் புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட செயலாளரினால் அந்தந்த பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதோடு அந்தந்த கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று காலை சனிக்கிழமை இவ்விண்ணப்பங்கள் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை புத்தளம் தில்லையடி OHRD நிறுவனத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக புத்தள மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் பூரணப்படுத்தப்பட்டுள்ள இவ்விண்ணங்கள் ஒப்படைக்கப்பட்டு அவை பள்ளி நிர்வாகிகளினால் சரிபடுத்தப்பட்ட பின் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை 8/03/2020 OHRD நிறுவனத்திடம் பெறப்படுவதற்கான தேவை இருப்பதனால் இவ்வாறு வாக்களிக்க விரும்புவோர் இவ்விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனவே இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவையாயின் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களின் தொலைபேசி இலக்கத்துக்கு 0773462567 தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.