Breaking
Sat. Nov 23rd, 2024

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷத ராஜபக்ஷவும் அரசியலில் ஈடுபடவுள்ளார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.


ஏனைய மாவட்டங்களை ஒப்பிடும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதுளை மாவட்டத்தில் பின்வாங்கலுக்கு முகம் கொடுத்துள்ளது.


ஆரம்பம் முதலே அந்த கட்சிக்காக பதுளை அமைப்பாளராக செயற்பட்ட குமார வெல்கம ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியை விட்டு விலகியமையே இதற்கு காரணமாகும்.


அவரது வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்ட தெத்னுக விதானகமகேவினாலும் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை.


அதற்கமைய பதுளை மாவட்டத்திற்காக திறமையான இளம் தலைவராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி பிரதிநிதியாகவும் யோஷித ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என கட்சியின் ஸ்தாபகம் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.


தற்போதைய நிலைமைக்கமைய யோஷித ராஜபக்ஷ இதுவரையில் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது.


முழுமையான அரசியலில் ஈடுபடும் நோக்கில், கடற்படையில் இருந்து விலகுவதற்கு தேவையான ஆவணங்களை யோஷித சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாவது மகனும் அரசியலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *