முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், கடந்த அரசில் திறக்கப்பட்ட “லங்கா சதொச” கிளைகள் பலவற்றை மூடுவதற்கு, தற்போதுள்ள புதிய அரசாங்கம் முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கை முதலில் மேற்கொள்ளப்படவுள்ளது. நகரங்களில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் கிளைகளை, கிராமங்கள் வரை கொண்டுசென்று இளைஞர், யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்ததுடன், அரச நிறுவனம் ஒன்றை கிராமத்திற்கு கொண்டுவருவதன் கஷ்டங்களை பொருட்படுத்தாது, தலைவர் ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த போது, பாரிய பணிகளை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள 14 சதொச கிளைகளைப் மூடுவதற்கான செயற்பாடுகளை அரசு மேற்கொள்வது குறித்து, மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புல்மோட்டையில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த சதொச கிளை, ஏற்கனவே மூடப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களிலும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் செல்வாக்கை குறைப்பதும், அவரைப் பழிவாங்குவதுமே இந்த நடவடிக்கையின் உள்நோக்கம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகையினால், கட்சி அரசியலுக்கு அப்பால், புதிய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை நுகர்வோர் கண்டிக்கின்றனர். ஒரு கிராமத்திலுள்ள அரச வளத்தை இல்லாமல் ஆக்குவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இவ்வாறன சக்திகளுக்கு எதிர்வரும் தேர்தலில், நல்லதொரு பாடம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.