பிரதான செய்திகள்

ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ச, வழங்கியிருந்த வாக்குமூலம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கலந்துரையாட பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிலாந்த விதானகே, விஜேதாச ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.

அத்துடன் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் அவர் அவர் கேட்டுள்ளார்.

Related posts

வெலிமடையில் விபத்து இருவர் காயம்

wpengine

புலிகளின் பிரிவினைவாத கொள்கை இன்னும் இருக்கின்றது! 20வது திருத்தம் மீள்பரீசிலனை வேண்டும்

wpengine

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி திடீர் மின் வெட்டு.!

Maash