பிரதான செய்திகள்

சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளைக் காட்சிப்படுத்துவற்கு தடை

தேர்தல் பிரச்சாரத்தின்போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளைக் காட்சிப்படுத்துவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்பாளர்கள், வாக்கு கேட்பதற்காக வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை.


அதேவேளை பொதுத் தேர்தலின் போது தேர்தல் விளம்பரங்களை குறைக்க மின் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே ஊடக நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

NFGG இரட்டைக்கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்

wpengine

முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்! அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

wpengine

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்!

Editor