உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார்.

இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத் அபே குணவர்தன கைச்சாத்திட்டார்.

இஸ்ரேலில் வெளிநாட்டு பணியாளர்களை இணைத்துக்கொள்ளுதல் மற்றும் தற்காலிக தொழில்துறையில் ஈடுபடுத்தல், இஸ்ரேலில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்ரேல் தேசிய மனித வள சந்தை நிலைமை மற்றும் வெளிநாட்டு ஊழியர் தொழில்வாய்ப்புக்கான பகிரங்க பிரிவு தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கையைப் போன்று தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வருடாந்த கோட்டா மற்றும் ஒவ்வொரு தொழில் வாய்ப்புக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Related posts

சிலாவத்துறை கமநல சேவை நிலையத்தில் கையாடல்! பிரதேசத்தின் சொத்து எங்கே?

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் விரைவில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம்

wpengine

நாளை வேப்பங்குளத்தில் Pfizer தடுப்பூசி! மன்னாரில் உள்ளவர்கள் மட்டும்.

wpengine