பிரதான செய்திகள்

சகோதர்களுக்கிடைய பனிப்போர் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பனிப் போர் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று கூறியிருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வருகிறதாக
சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி சமூக வலைத்தள ஊடகப் பிரிவில் பணியாற்றும் உதயங்க என்பவர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை உயர்வாக காட்டும் போஸ்ட் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்ததை, ஜனாதிபதியின் சமூக வலைத்தள ஊடகப் பிரிவின் பிரதானியான ஷர்மிளா ராஜபக்ச விமர்சிப்பது இந்த குரல் பதிவில் உள்ளடங்கியுள்ளது.


உதயங்க என்பவர், ஜனாதிபதியின் பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் மகிந்த ராஜபக்சவின் தொடர்பான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளதுடன் அதில் சமப்படுத்த முடியாத சிறப்புதன்மை என குறிப்பிட்டுள்ளார்.


இதனை விமர்சிக்கும் ஷர்மிளா ராஜபக்ச, இவ்வாறான பதிவுகளை பதிவேற்றினால், மகிந்த ராஜபக்சவிடம்தான் வேலை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வேலை செய்ய முடியாது என கூறுகிறார்.


இது குரல் பதிவு தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ள சமூக வலைத்தள செயற்பாட்டாளர் ஒருவர்,
“ஜனாதிபதிக்கும் அண்ணன் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பிரச்சினை என்று கூறினால், சேறுபூச வேண்டாம் என கூறுவார்கள்.

அப்படியானவர்கள் நன்றாக காதை கொடுத்து இந்த பதிவை கேளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Related posts

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியது! இலங்கை

wpengine

சுற்றுலா விசாவில் வந்து தீவிர மதப்பிரச்ச்சாரம் , சர்ச்சையை தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட 15 இந்தியர்கள்..!

Maash

அரசாங்கம் யுத்த நிறைவுக்கு காரணமானவர்களை கைது செய்து, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை கைது செய்ததாக பிரச்ச்சாரம் !

Maash