பிரதான செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு நிரந்தர சம்பள கட்டமைப்பு

இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு நிரந்தர சம்பள கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தேசிய சம்பள ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இதுவரை காலமும் இயங்கிய தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணையத்திற்கு அரசு ஊழியர்களின் சம்பளத்தை கையாள்வதற்கும், அரை அரசு நிறுவனங்களின் சம்பளம் குறித்த பரிந்துரைகளை செய்வதற்கு மாத்திரமே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.


புதிய தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணையம் அரச நிறுவனங்களுக்கு மேலதிகமாக, தனியார் நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் தனியார் துறை உள்ளிட்ட அனைத்து அரை அரசு நிறுவனங்களின் சம்பளம் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இதன் ஊடாக அனைத்து விதமான துறைகளை சார்ந்தவர்களினதும் சம்பள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

அஸ்கிரிய பீடாதீபதிகளை சந்தித்த மேல் மாகாண அளுநர்

wpengine

1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை

wpengine

வடக்கு முஸ்லிம்களை அழிக்க ஹக்கீம் அமைச்சர் சம்மந்தன் உடன் கைகோர்ப்பு

wpengine