Breaking
Sun. Nov 24th, 2024

கூட்டமைப்பு ஒருபோதும் ஸ்ரீலங்கா அரசிற்கு துணை போகாது, மக்களை அடைமானம் வைத்து செயற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் ரெலோ கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் எந்த நோகத்திற்காக ஆயுதங்கள் ஏந்தினோமோ அந்த நோக்கத்திற்காக ஆயதங்கள் இல்லா நிலையிலும் தொடர்ச்சியாக செய்துவருகின்ற அரசியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசிற்கு சோலைபோய் தனது சுயநலன்களை கருத்தில் கொண்டு செயற்பட்டார்கள் என்ற விமர்சனத்தினை இன்று தமிழ் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு நிற்பவர்கள் பிரச்சாரத்தினை செய்வது மிக கவலை தருகின்றது.

மேலும் கூட்டமைப்பு ஒருக்காலும் ஸ்ரீலங்கா அரசிற்கு துணை போகாது மக்களை அடைமானம் வைத்து செயற்படாது.

பாராளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் மீறப்படும் போது அதனை மீண்டும் கொண்ட பெருமை எங்கள் தமிழ் மக்களை சார்ந்தது. முக்கிய விடயங்களில் தமிழ் மக்களுடைய பங்களிப்பு மக்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு தமிழர்களின் பெருமையினை பறைசாற்றும் வகையில் இருந்துள்ளது.

மக்களின் உணர்வுகளை நாங்கள் அடைமானம் வைத்து செயற்படவில்லை என்பதை தெரிவித்து நிற்கின்றேன்.

கடந்த காலங்களில் வெள்ளைவான் கடத்தல்கள் நடைபெறவில்லை, மக்கள் சுதந்திராமக எங்கும் நடமாடகூடிய வாய்ப்பு கிடைத்தது இன்று வடக்கு கிழக்கு மக்களை பேருந்தில் இருந்து இறக்கி பரிசோதனை செய்கின்ற அவல நிலை அன்று இருக்கவில்லை காணாமல் போனவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை கொண்டு போராடுகின்ற போது அரச படையினரின் கெடுபிடிகள் இருக்கவில்லை, மாவீரர் துயிலும் இல்லத்தில் எங்கள் வீரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது எந்த தடையும் இருக்கவில்லை.

இன்று சர்வதேசத்திடம் நாங்கள் நியாயம் கேட்கமுடியும் இந்த நாட்டில் நாங்கள் பிரிந்து போவதா என்று சர்வதேசத்திடம் நியாயம் கேட்கின்ற வலுவினை எங்கள் தமிழ்தேசம் பெற்றுள்ளது அதுதான் எங்களின் கடமையாக இருந்தது.

இந்த அரசின் அடிவருடிகளாக நாங்கள் செயற்படவில்லை இப்பொழுது இருக்கின்ற ஐனாதிபதி, பிரதமர் ஆகியோர் முள்ளிவாய்க்காலில் எங்கள் மக்களை அழித்த விடயங்கள் எங்கள் மனங்களில் இருந்து விடுபடவில்லை.

இன்று நிலமை மாறி பரிசோதனை கூடங்கள், திணைக்களங்களில் படையினரின் தலையீடுகள், எந்த ஒரு விடயம் செய்தாலும் படையினரின் அனுமதி பெறவேண்டும் என்று அடுக்கி கொண்டு போகலாம், தற்போது உள்ள ஜனாதிபதியும் பிரதமரையும் கொண்ட அரசு.

எங்கள் மக்கள் இனவாதிகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கின்ற வகையில் சஜித்துக்கு வடக்கு கிழக்கில் என்றுமில்லாத அளவு வாக்களித்தார்கள்.

அவர் ஒரு வகையில் தோற்றது நன்மைக்கே. றிஷாட் பதியூதீன் போன்றவர்களின் ஆட்டம் நிறுத்தப்டப்டுள்ளது.

மேலும், மனித உரிமை மீறல் நடந்துள்ளது. ஐ.நா சபையில் ஒத்துக் கொண்ட எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்பதை இந்த அரசு விசாரணை செய்வதாக ஒத்துக்கொண்டு வந்து ஏமாற்றினார்கள்.

ஆனால் இன்றைய புதிய அரசு ஐ.நா சபை தீர்மானம் நடைமுறைப்படுத்த முடியாது என்று சொல்கின்றார். அதற்கான பதிலை இந்த புதிய அரசு சொல்லியாக வேண்டும். சர்வதேசத்தினையம் ஐ.நா சபையினையும் ஒருக்காலும் ஏமாற்ற முடியாது காரணம் எங்கள் நாடு தன்னிறைவடைகின்ற நாடாக இல்லை, கையேந்துகின்ற நாடாகத் தான் இருக்கின்றது. இதன் காரணமாக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்ற வாய்ப்புக்கள் இந்த அரசிற்கு வரும்.

எங்கள் காணமல்போன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், புதைக்கப்பட்டுள்ளார்கள் இவற்றுக்கு சாட்சி சொல்கின்றார்கள். ஜனாதிபதியும் அமைச்சரும் ஆனால் எந்த இடம் என்று மறுக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் தெரிவிக்கும் சாட்சி கருத்துக்கள் ஐ.நா சபையில் எங்களுக்கு பலமான விடயமாக மாறுகின்றது.

இன்று தென்னிலங்கை சிங்கள கட்சிகளின் பிரநிதிதிகள் வடக்கு கிழக்கில் கால் ஊன்றுகின்ற நிலை. இன்று தமிழர்கள் பூர்வீக குடிகள் என்கின்ற நிலமை மாற்றப்படுகின்ற அபாயம் காத்திருக்கின்றது இந்த அபாயத்தினை புதிதாக கட்சி தோற்றியவர்கள் உணரவில்லை.

எனவே, பாராளுமன்ற தேர்தலில் முதுகெலுப்பு இல்லாத மக்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்கின்ற தலைமைகளை நம்ப வேண்டாம் என்று நான் சொல்லிக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *