பிரதான செய்திகள்

ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்கு வர தான் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


பொலன்நறுவை பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.


தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர்.


முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கடும் நம்பிக்கை உள்ளது என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுற்றுலா விசாவில் வந்து தீவிர மதப்பிரச்ச்சாரம் , சர்ச்சையை தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட 15 இந்தியர்கள்..!

Maash

கூட்டமைப்பில் இருந்து விலகி கொள்ளும் சித்தார்த்தன்

wpengine

விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா? இல்லையா? விசேட அறிவிப்பு!

Maash