Breaking
Sun. Nov 24th, 2024

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று காலை கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


இவரை வரவேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உத்தியோக பூர்வமாக பிரத்தியேக பதிவேட்டில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.


இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தரத்தில் உள்ள கணபதிப்பிள்ளை மகேசன், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அமைச்சரவையின் ஒப்புதலுடன் யாழ். மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.


1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக அவர் பதவி வகித்திருந்தார்.


2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக பணியாற்றினார். கென்யாவுக்கான இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவராக பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இவர் பதவி வகித்திருந்தார்.


இந்த நிலையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வரவேற்பு நிகழ்வில் மதத்தலைவர்களின் ஆசியும் மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையுரையும் அரசாங்க அதிபர் உரையும் இடம்பெற்றது.

மாவட்ட செலயக அனைத்து அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *