இலங்கையின் வெளிநாட்டு கடன் 1700 பில்லியனை இந்த அரசாங்கத்தால் தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலையில் உள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.
முள்ளிப்பொத்தானை, முள்ளி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியாவிடம் வாங்கிய கடனை மீள வழங்க முடியாமல் மூன்று வருடங்களுக்கு நீடித்து தரும் படி மோடியிடம் கேட்பதற்கு பிரதமர் ஒரு குழுவுடன் சென்றமை அனைவரும் அறிந்த உண்மையே.
இந்த சுமைகளை சுமக்க முடியாது இருக்க அரச வரிகளை குறைத்து பொது தேர்தலில் தமது வெற்றியை தக்கவைக்க எடுக்கும் முயற்சியே.
அதுமட்டுமல்ல ஒரு இலட்சம் பெயருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே.
தற்சமயம் நாடு கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் தொடர்ச்சியாக வழங்கி வந்த எத்தனையோ மாதக் கொடுப்பனவுகளை ஜனாதிபதி உத்தரவில் நிறுத்தியது அதிர்ச்சியான விடயமே.
அனைவருக்கும் தெரிந்த உண்மையே, அப்படி இருக்க ஒரு இலட்சம் பெயருக்கு சம்பளம் எப்படி வழங்குவது? ஆகவே இது ஒரு தேர்தலுக்கான பொய் முன்னெடுப்பு என்பது யாவரும் அறிந்த உண்மை.
அப்படி இவர்கள் இக் கடன்களை தீர்த்து இவர்களின் பொருந்துதல்களை நிறைவேற்ற எடுக்கும் நாடகமாகும்.சலுகைகள் ஆளும் கட்சியினருக்கு. இல்லையேல் கட்சியில் இருந்து பிரிகின்றவர்களே தற்போது இருக்கின்றார்கள்.
எதிர் வருகின்ற தேர்தலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும், என்று கூறியுள்ளார்.