பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகும் உருவாக்கப்பட வேண்டும் -ஹசன் அலி

அரசியல் தீர்வு விடயத்தில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது, பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற்கு ஒப்பானது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான தனி பிராந்தியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்வுத்திட்டம் ஒன்று வடமாகாண சபையில் கடந்த தினம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது குறித்த முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக அதன் பொது செயலாளர் ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, இந்த விடயத்தை கூறினார்.
அதேநேரம் வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகும் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பிலும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி கருத்து வெளியிட்டிருந்தார்.

 

Related posts

தோனாவின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

பின்புற பாக்கெட்டில் பேர்ஸ் வைப்பவரா நீங்கள்:திடுக்கிடும் தகவல்

wpengine

வெப்பம் அதிகரிப்பு இளநீர் தோடை வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு

wpengine