Breaking
Sat. Nov 23rd, 2024

”காணி உறுதிகளோ அல்லது வேறு எந்த மோசடிகளோ நான் செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு நான் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுக்க விரும்புகிறேன்.

தேர்தல் காலங்களில் இப்படியான குற்றச்சாட்டுக்களை விடுப்பது வாடிக்கையாகி விட்டது.

நான் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதற்கு ஆதாரத்தை காட்டி நிரூபிக்காமல் வெறுமனே எழுந்தமானமாக கூறக் கூடாது.ஸஹ்ரான் சதொச வாகனங்களை பாவித்தார் என்று முன்னர் கூறினார்.அதற்கு என்னாயிற்று? சிங்கள மக்களை தவறான வழியில் நடத்தி அரசியல் ஆதாயம் தேட அவர் முயல்கிறார்.

எனது அமைச்சு வாகனங்களை ஸஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியிருந்தால் அதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே ? எனக்கு அமெரிக்காவிலோ அல்லது எந்தவொரு நாட்டிலோ வங்கி கணக்கு கிடையாது.

காணி உறுதிகள் என்னிடம் இருப்பதாக சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய்.அப்படியான காணிகள் இருந்தால் அவற்றை அரச உடைமைகளாக்குமாறு நான் ஏற்கனவே பல தடவை கூறியிருக்கிறேன்.சதொசவில் நான் மோசடி செய்ததாக கூறப்பட்டது.நான் அமைச்சு கேள்விமனு விடயங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை.

எனவே என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் நிராகரிக்கிறேன்.நான் என் நற்பெயரை களங்கப்படுத்தியமைக்காக அவர் மீது 100 கோடி ரூபா மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய சட்டத்தரணி மூலம் அறிவித்துள்ளேன்.அவர் அதற்கு இரு வாரத்திற்குள் பதில் தராவிட்டால் வழக்கு தொடுக்கப்படும்.


குற்றச்சாட்டை அவர் சுமத்துவதால் – அவரது ஆட்சி இருப்பதால் இவை உண்மையாக இருந்தால் நிரூபிக்க வேண்டும்.சி ஐ டி தனது வேலையை செய்யவேண்டும்.விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகளை வைத்து சி ஐ டி செயற்படக் கூடாது.வில்பத்து காடுகளை நான் அழிப்பதாக கூறினார்கள்.

அதனை விசாரிக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.ஈஸ்ரர் தின தாக்குதல் குறித்தும் விசாரணை செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் கோரினேன்.தவறு செய்தால் இப்படி கோருவோமா? ”
கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் ,அடுத்த தேர்தலில் 10 பேர் வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியில் வெல்வார்களென குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *