பிரதான செய்திகள்விளையாட்டு

விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்

IPL கிரிக்கெட் போட்டியின் 16 ஆவது லீக் ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்.

அந்த அணியின் தலைவர் விராட் கோலி (80), டி வில்லியர்ஸ் (83) ஜோடி 2 ஆவது விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைக் குவித்தது. டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள புனே அணி 3 ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூர் அணி பந்து வீசும்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

18 தொடக்கம் 21வரை வேட்பு மனு தாக்கல்

wpengine

விஷர் நாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் பலி : காத்தான்குடியில் மக்கள் அச்சத்தில்.

Maash

மூன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கு இடமாற்றம்! அதில் வவுனியா அதிபரும்

wpengine