Breaking
Sat. Nov 23rd, 2024

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


வவுனியா மதீனா நகர், அல் மதீனா வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுங்கள். மார்க்க வழியில் சரியான பாதையில் பயணிக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒழுக்கத்துடன் கற்கப்படுகின்ற கல்வி தான் அவர்களை நல்ல மனிதர்களாக, தலைவர்களாக, கல்விமான்களாக, வர்த்தகர்களாக, ஆலிம்மாக மாற்றுகின்றது. ஆகவே ஒழுக்க விடயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.


அத்துடன், ஒற்றுமையாக வாழ்ந்து கொள்ளுங்கள். தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்துவதாக இந்தக் கிராமம் வளர்ந்து வருகின்றது. இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களுடைய குறைகளை, தேவைகளை, வீடில்லா பிரச்சனையை, தொழில்வாய்ப்பு பிரச்சனையை இங்கு வாழ்கின்ற நமது கட்சியினுடைய முக்கியஸ்தர்கள், ஊரவர்கள், பள்ளி நிர்வாகிகள் என்னிடத்தில் வந்து பேசுவார்கள்.


இங்கு வாழ்கின்ற மக்களின் வறுமையை போக்குகின்ற திட்டங்களை வகுத்து செயற்படுமாறு சொல்லுவார்கள். இவ்வாறு ஒற்றுமையாக வாழும் இந்த நிலை பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த நிலையை கட்டிக் காக்க வேண்டிய தார்மீக கடமை எல்லோருக்கும் இருக்கிறது. எனவே தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.


பேரினவாத சக்திகள் இந்த சிறுபான்மை சமூகத்தினுடைய உரிமைகளில் கைவைப்பதை நாங்கள் பார்க்கின்றோம். சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஆள எத்தனிக்கின்ற பல விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம்.


பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை தலைவர்கள் பற்றி இல்லாத, பொல்லாத அபாண்டங்களைச் சொல்லி பெரும்பான்மை மக்களிடத்தில் எதிரிகளாக சிறுபான்மை தலைமைகளை காட்டுகின்ற அசிங்கமான அரசியல் அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது.


சிறுபான்மையாக வாழுகின்ற நமது மக்கள் தென்பகுதியில் வாழுகின்ற பிரதேசங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வருகின்ற போது அங்கு வாழுகின்ற எல்லா மக்களையும் தாக்குகின்ற அசிங்கமான செயற்பாடுகளை நாங்கள் காண்கின்றோம்.


எனவே கடந்தகால வரலாறுகள் எங்டகளுடைய தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல பிளவுகளை ஏற்படுத்தியிருந்தது.


எதிர்காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்தித்து ஒற்றுமையாக ஊரின் உடைய நலனுக்காக, மக்களினுடைய நலனுக்காக, எமது பிரதேசத்தினுடைய நலனுக்காக, அபிவிருத்திக்காக, எமது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எமது இருப்புக்காக நாம்ட ஒற்றுமையாக வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
இருவருக்கு இடையில் பிரச்சனைகள் வந்தால் அந்த இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்க வேண்டுமே தவிர, இரண்டு பேரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவாராக இருந்தால் அதை சமூகப்பிரச்சனையாக அல்லது இனப்பிரச்சனையாக பார்த்து இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்பத்டுத்தும் அசிங்கமான வேலைகளை செய்யக் கூடாது.
கடந்த காலங்களில் எமது ஒற்றுமையால் தான் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள், வீதிகள் எல்லாவற்றையும் ஓரளவு அடைந்து கொண்டோம்.


எதிர்காலத்திலும் எங்களுடைய தேவைகளை அடைந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட சமூகமாக இருந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *