பிரதான செய்திகள்

அரச சேவையில்வுள்ள கர்ப்பிணி பெண்களை குறிவைக்கும் சஜித்

கர்ப்பிணி பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு நான்கு மாதகால சம்பளத்துடனான பிரசவ விடுமுறையை 6 மாதம் வரை நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.


இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் தற்போதைய சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்.


அந்தந்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு தேவையான நிதியியல் ஒத்துழைப்புகளை வழங்கக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இது தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு பலமாக அமையும்.
பொதுநிர்வாக சட்ட திட்டங்களுக்கமைய பெண்களுக்கு மகப்பேற்று காலங்களுக்கான 84 வேலை நாட்களுக்கு முழுமையான சம்பளத்துடனான விடுமுறையும், அதற்கு மேலதிகமாக பகுதியளவிலான சம்பளத்துடனான 84 நாள் விடுமுறையும், தேவைப்பட்டால் சம்பளம் இல்லாத 84 நாள் விடுமுறையும் வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துடனான நான்கு மாத மகப்பேற்று விடுமுறை காலத்தை ஆறு மாத காலம் வரையில் நீடிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.


இதேவேளை வருமான நிலையை பார்க்காது சகல கர்ப்பிணி பெண்களுக்குமான போசனை பொதி வேலைத்திட்டம் இந்த வருடத்தில் செயற்படுத்துவதற்கான நிதி, அமைச்சுக்கு கிடைத்துள்ளது.
மாவட்ட செயலாளர்களுக்கு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல மாவட்டங்களில் தாய்மார்களுக்கு வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முசலி பிரதேச செயலாளரினால் இரண்டாம் மொழி சான்றிதழ் வழங்கி வைத்தார்.

wpengine

மக்கள் உரிமைகளை பெற்றுக்கொடுக்காத விக்னேஸ்வரன், இரா.சம்பந்தன்

wpengine

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

wpengine