பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் 50வீடுகள்! முதல் கட்டம் 11வீடுகள்

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றது.


ஜேர்மன் நாட்டின் உயர் மறைமாவட்டத்தின் நிதி உதவியுடன்,கறிற்றாஸ் செடேக் அமைப்பினூடாக குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.


முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் இடம் பெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.


மேலும் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், கரிற்றாஸ் செடே தேசிய நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை மகேந்திர குணதிலக்க,மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமார், கடற்படையின் வடமேல் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் ருவான் பெரேரா உற்பட அருட்தந்தையர்கள், முள்ளிக்குளம் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் வீடுகளுக்கான அடிக்கல் ஆசிர் வதிக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 11 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் வரகை தந்த விருந்தினர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.


குறித்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைக்ரோசோப்ட் நிறுவனத்தின்ஸ்தாபகரான பில்கேட்ஸ் விலகினார்.

wpengine

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தான் திருப்தி

wpengine

தலைவர் ரிஷாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை; அவர் மீது அரசியல் பழிவாங்கல்

wpengine