கட்டுரைகள்பிரதான செய்திகள்

சீனர்கள் நாளை மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்! எச்சரிக்கை

சீனாவில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக அந்த நாட்டிற்கு சென்ற பெருமளவு சீனர்கள் நாளை மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பல்வேறு அபிவிருத்தி பணிகள் மற்றும் கட்டுமாண பணிகளில் சீனாவை சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் பணி புரிந்து வருகின்றனர்.

உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இவர்கள் இலங்கைக்கு வருவது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், அவ்வாறு நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை விமான நிலையத்தில் வைத்தே வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனைகளின் அடிப்படையில் இலங்கையில் கொரோனோ வைரஸ் தாக்கம் இல்லை என சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

wpengine

முசலி பிரதேச செயலாளரின் நடவடிக்கை காரணமாக மன்னார் மட்டத்தில் சிறந்த அடைவு! அதிபர் பாராட்டு

wpengine

இலங்கை – இந்தியா பாலம் அமைச்சர் கபீர் ஹசீம்

wpengine