பிரதான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி சஜித்துக்கு வழங்கப்பட வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி சஜித்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், மீண்டும் அவரைப் பிரதித் தலைவராக நியமிக்க ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளார்.


இதன் மூலம் தன் தலைமைப் பதவியைத் தக்க வைக்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாஸ விலகியிருந்தார்.

இவரைக் கட்சியின் தலைவராக நியமிக்குமாறு இவரின் ஆதரவு அணியினர் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் நிலவி வருகின்றது.

இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவை மீண்டும் ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமிப்பதற்குக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் தொடர்பான தெரிவுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையிலேயே சஜித் பிரேமதாஸவை மீண்டும் பிரதித் தலைவராக நியமிப்பதற்கும் கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 27ம் திகதிக்குள் கட்சியின் மத்திய குழுவுக்கான அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனை சபையின் அனுமதியுடனேயே ரணில் விக்ரமசிங்க செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஞானசாரவுக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிக்க அசாத்சாலிக்கு என்ன தகுதி

wpengine

ACMC ஆதரவுடன் ஹொரபத்தான பிரதேச சபையின் ஆட்சியை NPP கைப்பற்றியது !

Maash

நல்லாட்சியில் இனவாத கைதுகள்

wpengine