மருத்துவர் மொஹமட் ஷாபி சிஹாப்தீன் சம்பந்தமான வழக்கின் விசேட வழக்கு தடயமாக இருந்த அவரது வீட்டில் சீ.சீ.டிவி. கெமராக்களில் பதிவான காணொளிகள் அடங்கிய குறுந்தகடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் கையளிக்குமாறு குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி குருணாகல் பொலிஸார் மருத்துவர் ஷாபியை கைது செய்யும் போது வழக்கு தடயமாக சந்தேக நபரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ. சீ.டிவி கெமராக்களில் பதிவான காணொளிகளை கைப்பற்றியிருந்தனர்.
அவற்றை விசாரணைகளுக்காக பொலிஸார் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் கையளித்திருந்தனர்.
எனினும் முன்னர் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவற்றை மருத்துவரிடம் திரும்ப கையளித்துள்ளனர்.
இந்த காணொளிகளை தம்மிடம் மீண்டும் வழங்குதாறு குற்றவியல் விசாரணை திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மருத்துவர் தொடர்பான விசாரணைகள் குருணாகல் பொலிஸாரிடம் இருந்து குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு மாற்றப்பட்ட போது வழக்கு தடயங்கள், ஆவணங்களை திணைக்கள அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.