Breaking
Fri. Nov 22nd, 2024

இலங்கையில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.


அந்த வகையில் நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியளவில் தொழில் வழங்கப்படும் என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த கால அரசாங்கத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மாத்திரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.

தற்போது உள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி இருக்கின்றனர்.

இவர்கள் எந்தவித வேறுபாடுமின்றி பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *