பிரதான செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகியாக இலங்கை பெண்

திருமணமானவர்களுக்கான ஆசிய அழகு ராணி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.


மியான்மாரில் நேற்றைய தினம் திருமணமான ஆசிய அழகு ராணிப் போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்தோர் பங்குபற்றியிருந்த நிலையில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்த சமந்திகா குமாரசிங்க அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.

வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த இவர் 28 வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.

கடந்த 6ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த கெரோலினி ஜுரி 2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகியாக முடி சூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் மின்சார வயரின் மீது தென்னை மரம். – அகற்றுவதில் அசமந்தம் .

Maash

தடை ஏற்பட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கி முகாமையாளர் அனுப்பிய செய்தி

wpengine