பிரதான செய்திகள்

வவுனியாவில் அடிக்கடி தடைப்படும் மின்சாரத்தால் மக்களது இயல்பு நிலை பாதிப்பு

வவுனியாவில் அடிக்கடி தடைப்படும் மின்சாரத்தால் மக்களது இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதுடன், கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியாவின், வேப்பங்குளம், கற்குழி , நெளுக்குளம், உக்கிளாங்குளம், புளியங்குளம் , போகஸ்வேவ , பூவரசங்குளம் , செட்டிக்குளம் போன்ற பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கா.பொ.த சாதாரண தர மாணவர்களின் பரீட்சை நடைபெற்று வருவதினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மின்சார சபையின் வடமாகாண தலைமை காரியாலயத்தினை தொடர்பு கொண்டு வினவிய போது,
வவுனியாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மின் தடங்கல் ஏற்படுவதாகவும் அதனை எமது ஊழியர்கள் விரைந்து நிவர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகாலை வேளையில் பரீட்சைக்கான முன் ஆயத்தங்களை மாணவர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் மண்ணெண்ணை விளக்கில் தொடர்கின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பசிலின் வருகையின் பின்பு விமல்,கம்மன்பிலவின் துறைகள் பறிபோகும்

wpengine

பாடகர் இராஜ் விக்கிரமரத்னவின் கோரிக்கை ஒன்று! அமைச்சர் றிசாட் ஒரு இலட்சம் வேலை திட்டம்

wpengine

நிதி அமைச்சகத்தின் பதிவுசெய்யப்பட்ட 176 வாகனங்க இல்லை , தகவல்களைக் கண்டறிய நடவடிக்கை.!

Maash