புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு அமைவாக பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக்கு அமைவாக அறவிடப்படும் வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரி நிவாரணத்தின் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண நடைமுறையானது கடந்த 2019.12. 01 முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
முன்னைய கட்டணம் (ரூபா) மறு
பதிவு கட்டணம்
17, 837
16,41
பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,755
3,456
இந்த கட்டண குறைப்பு வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.