உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்க எந்த தருணத்திலும் தயாராக இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். கண்டி மாவட்டத்தை பொறுத்தவரையில் எந்த நேரத்திலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஜனவரி மாதம் முதற்பகுதியில் நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாங்கள் எந்த நேரத்திலும் தயாராகவுள்ளோம். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீமிடம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், உள்ளக பிரச்சினைகளை நாட்டினுள்ளே தீர்த்து கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இதுவே எங்களது அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இதனைவிடுத்து, சர்வதேசங்களின் அழுத்தங்களுக்கு அமைய நாங்கள் செயற்பட தயாரில்லை என கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.