பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தர்மபால நியமனம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தருமான தர்மபால செனவிரட்ண தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஜனாதிபதியால் நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

இதன்மூலம் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பேதமில்லாமல் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

கட்சி சார்ந்து செயற்படாது, மக்களுக்காக கட்சி சார்பில்லாமல் பணியாற்றுவேன். தற்போது வீதி, வீட்டுதிட்டம் போன்ற பல்வேறு தேவைகள் மக்களுக்கு இருக்கிறது.

அதனை சீர் செய்வதற்காக மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன். அனைத்து மக்களும் என்னை சந்திக்கமுடியும்.

அதன் மூலம் வவுனியா மாவட்டத்தினை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்

wpengine

இறக்காமம் பிரதேச சபைக்கு ஆதரவு வழங்கி பிரதி தவிசாளர் பதவியினை அ.இ.ம.கா கைப்பற்றியது

wpengine

சுதந்திர நிகழ்வில் முஸ்லிம் தலைவர்களை ஞாபகமூட்டிய சப்ரி

wpengine