பிரதான செய்திகள்

பொதுத் தேர்தலின் பின்னர் எமது அமைப்பை கலைத்து விடுவோம்

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பை கலைக்க போவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


ராஜகிரியவில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எமது நாட்டில் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்ற மாயையான நிலைப்பாடு இருந்தது.
ஜனாதிபதித் தேர்தலுடன் அது கட்டுக்கதையாக மாறியுள்ளது.

தற்போது நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம் கிடைத்துள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் சிறந்த அமைச்சரவையுடன் சிறந்த பயணத்தை செல்ல முடியும். நாட்டை முன்னெடுத்து செல்ல சிறந்த தலைமைத்துவம் இருக்கின்றது.

இதனால், இனிமேல் எமது அமைப்பு அவசியமில்லை என நாங்கள் நம்புகிறோம். பொதுத் தேர்தலின் பின்னர் எமது அமைப்பை கலைத்து விடுவோம் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

48மணி நேரம் தேனிலவு! மனைவியை பறிக்கொடுத்த கணவன்

wpengine

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்

wpengine

சமஷ்டியினை நிறைவேற்றி காட்டுங்கள் பார்ப்போம்! விமல் சவால்

wpengine