Breaking
Thu. Nov 28th, 2024

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில நகை தொழிலகங்களில் நகைகளை பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் இன்மையால் தாம் ஏமாற்றப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இவ் விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரபல நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை செய்யும் நிலையங்களில் நகைகளை மக்கள் கொள்வனவு செய்யும் போதும், அதே நேரத்தில் பழைய நகைகளை அழித்து புதிய நகைகளை செய்யும் போதும் 24 கரட் நகையாக செய்து தருவதாக கோரி பணம் பெறப்படுகின்ற போதும் 18 தொடக்கம் 22 கரட் பவுண்களிளே நகைகள் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் தங்க நகைகளை தங்கத்தின் தரத்தை பரிட்சித்து பார்க்கக் கூடிய வசதி உள்ள நகை தொழிலகங்களும் ஏனைய நகைக் கடை உரிமையாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பதால் நகைகளின் தரத்தை பரிட்சித்து தருவதற்கு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவசர பண தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்க வங்கிகள் மற்றும் தனியார் அடகு பிடிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போதே நகையின் தரம் தொடர்பான உண்மை நிலை தெரிய வருவதாகவும் அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நகை கடை உரிமையாளர்களிடம் சென்று கேட்கும் போது காலம் சென்று விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் பாவனையாளர் அதிகார சபையினரிடம் வினவிய போது,
மன்னாரில் தங்க நகைகளை விற்பனை செய்யும் போது நகையின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பற்றுசீட்டு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு தங்க நகைகளை கொள்வனவு செய்யும் போது தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்திய பற்றுச்சீட்டு வழங்கப்படாத நிலையில் தங்க நகை கொள்வனவு செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் பாவனையாளர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யும் பட்சத்தில் குறித்த நகை தொழிலகம் மற்றும் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மன்னார் பாவனையாளர் அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *