பிரதான செய்திகள்

கருணாவின் மனைவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதன் போது செருப்படியும்

மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  பிரச்சார கூட்டங்களிற்காக பசில் ராஜபக்ச சென்றிருந்தார். இதன்போது மகிழூர் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார்.

இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார்.

பசில் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்ட மேடையில் இரண்டு மனைவிகளும் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பசில் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இரண்டு மனைவிகளிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர் பசில் ராஜபக்ச மற்றும் கருணா ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதன் பின்னர், இரண்டு மனைவிகளும் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதன்போது செருப்படியும் நடந்ததாக தெரிகிறது.

பின்னர் கருணாவின் உதவியாளர்கள் அவர்களை சமரசம் செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

Related posts

அளுத்கம தர்கா நகரில் புறாக்களை கொன்று Tik Tok வெளியிட்ட மூவர் கைது!

Editor

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமார சுவாமி

wpengine

முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தல்

wpengine