ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் காலம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினத்துடன் நிறைவடையிருந்த நிலையில், கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக அட்டைகளில் சுமார் 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்கைள் நேற்றைய தினம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.