பிரதான செய்திகள்

பிரதமர் போட்டி! சஜித்துக்கு பதிலடி கொடுத்த ரணில்

புதிய பிரதமர் நியமன முறை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறிய கருத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பதில் அளித்துள்ளார்.

புதிய பிரதமர் விடயத்தில் அரசியலமைப்பு படியே நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் புதிய ஜனாதிபதி, பிரதமரின் அனுமதியுடனேயே அனைத்தும் செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய சஜித் பிரேமதாச, “தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடிந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார்” என கூறினார்.

இந்நிலையில், சஜித் பிரேமதாசவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றில் இரண்டு இருக்கின்றது எங்களை தாக்க வேண்டாம்

wpengine

மகளுக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகளை வழங்க புடின் திட்டமிட்டம்.

wpengine

“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” – ரிஷாட்

wpengine