எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்று முதலாவது இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.