முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச மாற்று வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினால் இந்த தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவின் குடியுரிமை சம்பந்தமான வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கருதி சமல் ராஜபக்ச வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் காலத்தில் கோத்தபாயவுக்கு போட்டியிடுவதில் எந்த தடையும் ஏற்படாது என உறுதியானால், சமல் ராஜபக்ச, தனது வேட்புமனுவை திரும்ப பெறுவார் எனக் கூறப்படுகிறது.
கோத்தபாய போட்டியிடுவதில் தடையேற்பட்டால், சமல் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.