Breaking
Mon. Nov 25th, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்ட பின்னர் அது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச முக்கியமான விடயங்களை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் அவரது தனிப்பட்ட நண்பர்களை சந்தித்த போதே அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

“ நான் முன்கூட்டியே இதனை கூறினேன். பசில், கோத்தபாய கவனத்திலும் எடுத்துக்கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஐந்து அணிகளாக பிரியும் என அவர்கள் நினைத்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்படி உடைய போகிறது என்பதை கணக்கிட்டும் எனக்கு காட்டினர். ரணில் என்பவர் கல் விலாங்கு மீன் போன்றவர், மற்றவர் மங்கள, அவர் சூழ்ச்சியின் பிதாமகன்.

இவர்கள் இணைந்து சஜித்தை கொண்டு நடத்திய நாடகத்தில் எமது அணியினரும் சிக்கினர். கிளி மஹாராஜாவும் சிக்கினார். நாடும் சிக்கியது. அந்த எளிய மனிதன் கபீர் ஹாசிமும் சிக்கிக்கொண்டார்.

கிளி எந்தளவுக்கு சிக்கிக்கொண்டார் என்றால், பிரேகிங் செய்தியை ஒளிப்பரப்பாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

இவற்றை சஜித் அறிந்திருக்கவில்லை. அவர் காற்றில் மிதந்தவர் போல் சென்றார். சஜித்தை ஜனாதிபதித் தேர்தல் நிறுத்துவது என்று ரணில் முன்கூட்டியே தீர்மானித்துதான் இந்திய பிரதமர் மோடி வரும் போது அவரை பரிவார அமைச்சராக கூடவே அனுப்பினார்.

ரணில் அங்கு இருந்தே வேலை ஆரம்பித்தார். அப்போது அவர்கள் செய்த சுத்துமாத்தில் எமது ஆட்கள் ஏமாந்து போயிருந்தனர்.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ரணில், சஜித் நாடகத்தை முன் நோக்கி நகர்த்திருனார். கோத்தபாயவின் பிரசாரத்திற்கு பதிலாக ஊடகங்களில், ரணிலா, சஜித்தா, கருவா என்பதே முற்றிலுமான தலைப்புச் செய்திகளாக இருந்தன. அனைவரும் கோத்தபாயவை மறந்து போயினர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வரும் வரை ரணில் இதனை இழுத்துக்கொண்டு சென்றார்.

போதா குறைக்கு நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி வீழ்ந்து போயிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரை தட்டி எழுப்பினர். இறுதியில் என்ன நடந்தது?. சஜித் ஜனாதிபதி வேட்மனுவை பெற்றுக்கொண்டு வந்தது போல் காட்டி ஐந்து சதம் செலவில்லாமல் பெரிய பிரசாரம் செய்து வேட்பாளரை அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பெரிய பிரச்சினை இருக்கவில்லை. அப்படியான பிரச்சினை குறித்து செயற்குழுவில் எவராவது ஒரு வார்த்தை பேசினார்களா?. இல்லையே..

ஆட்டுக்கு பின்னால் சென்ற நரியை போல், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்படும் வரை எங்கள் அணியினர் காத்திருந்தனர்.

ரணிலின் இந்த வேலையால், பிரிந்து போனவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கு சிறந்த உதாரணம் திஸ்ஸ அத்தநாயக்க. அவர் மீண்டும் கட்சிக்கு சென்று சஜித்திற்காக வேலை செய்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்த நான் எத்தனை முறை முயற்சித்தேன். என்னால் கூட முடியாததை இவர்களால் செய்ய முடியுமா?. எமது அணியினருக்கு இது தேவைதான்” என மகிந்த ராஜபக்ச தனது நண்பர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *