பிரதான செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார்.
இதன்படி, அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்ட கோரிக்கைக்கு இணங்கி செயற்பட தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

எதிர்வருகின்ற நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற அனைவரையும் மீண்டும் வந்து இணைந்து கொள்ளுமாறு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச, வெளியிட்ட விசேட அறிக்கையை ஏற்று திஸ்ஸ அத்தநாயக்க இன்று ஐக்கிய தேசியக்கட்சியில் மீண்டும் இணைந்தார்.

முன்னதாக அமைச்சர் சஜித்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று,கட்சியின் வெற்றிக்காக மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கடிதமொன்றின் மூலம் சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

‘கிளிநொச்சியில் விரைவாக மீள் குடியமர்த்தவும்’

Editor

யாழ் வைத்தியசாலை நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்

wpengine

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்!

wpengine