பிரதான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய தேவை

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை அறிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு தெரிவுக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைக்கு அமையவும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேட்பாளரை நியமிப்பதில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் முழுமையான ஆதரவும் கிடைத்தது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஒரு சிலரின் பெயர்கள் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டது.

கட்சி பிளவுப்படாது ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே இருந்தது. எனினும், எமது கொள்கையுடனேயே நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

அதேபோல் எமது பிரதான கொள்கையுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும். இதில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இருந்து எமது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

எமக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் எம்மிடம் இந்த வாக்குறுதிகளை கேட்டுள்ளனர்.

ஆகவே, அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். இதில் சகல கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இராஜாங்க அமைச்சு தேவையில்லை! அமைச்சு பதவி தான் வேண்டும்.

wpengine

இராஜாங்க பதவிகளை இதுவரை ஏற்றதில்லை! அமைச்சு வேண்டும்

wpengine

இன்று தொழிலாளர் தினம்

wpengine