பிரதான செய்திகள்

வடக்கிலுள்ள பௌத்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் குடியேற்றம்

முல்லைத்தீவில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குடியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசியலமைப்பு வட மாகாணத்திற்கு செல்லுபடியாகாது என முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தெரிவித்ததாகவும், இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வடக்கிலுள்ள பௌத்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பகே மேதாலங்கார தேரரின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையினை வலுக்கட்டயமாக செய்தமையினால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரிலும் ,நாவலப்பிட்டியிலும் ஆட்டோ திடீர் தீ

wpengine

மாற்று மதத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை

wpengine

விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை.

wpengine