கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த செயலமர்வில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்டோர் விரிவுரையாற்றுகின்றனர்..
அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கு முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக புத்திஜீவிகள், துறைசார் ஆர்வலர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைப் பெறும் பொருட்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த செயலமர்வை ஒழுங்கு செய்துள்ளது. இந்த செயலமர்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் புத்திஜீவிகளும் பங்கேற்றுள்ளனர்.
இம் முழுநாள் செயலமர்வு அரசியலமைப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களும் அரசியலமைப்புக்கான சீர்திருத்தங்களும், அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலிருந்து வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற மீயுயர் தன்மையை மீளமைத்தல் மற்றும் எண்ணிக்கையில் சிறிய சமூகங்களின் அரசியல் நோக்கு,சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான சிபாரிசுகள் மற்றும் இலங்கை முஸ்லீம்கள் எதிர்நோக்கியுள்ள அரசியல் ரீதியான சவால்களும் எதிர்பார்ப்புக்களும்”எனும் தலைப்புக்களில் விரிவுரைகள் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம் ,சட்டமுதுமாணிகளான கௌரவ ரவுப் ஹகீம் , நிசாம் காரியபப்ர் , பாயிஸ் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் சல்மான் ஆகியோரால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டு கொண்டு இருக்கின்றது .