ஹக்கீம், றிஷாட்டை தாக்குவதை நிறுத்துங்கள், மகிந்த ராஜபக்ஷ கட்சிக்காரர்களுக்கு உத்தரவு.
றிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரச்சார பிரிவுகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் விளம்பரத் துறையின் உயர் நிர்வாகிகள் ஆகியோருடன் நடந்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்தத்துடன், சமூக ஊடக ஆர்வலர்கள் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் சிங்கள வாக்காளர் தளம் ஏற்கனவே இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையே தெளிவான கோடுடன் பிரிக்கப்பட்டுள்ளதுடன், இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் பொதுஜன பெரமுனவிற்கு வெற்றிக்கொள்ளக்கூடிய எதுவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014 ல் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் இதயங்களை வெல்லும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று அவர் அதற்கு முன்னதாக முஸ்லிம் அரசியல்வாதிகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இதற்கு எதிராக கருத்து தெரிவிக்க முன்வந்த சிங்கள இனவாதியிடம் “நீங்களே தனியாக ஆயிரம் வாக்குகளை வெல்ல முடியுமா..?? யாரும் கோட்டாவை வெல்ல முடியாது. ஆனால் பதுர்தீன் அதைச் செய்ய முடியும். எனவே நான் சொல்வதைச் செய்யுங்கள்” என்று மஹிந்த கூறியுள்ளார்.
– இணையம் –