ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு தவறும் பட்சத்தில் வேறு கட்சியிலாவது அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்சின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினர் தங்கள் வேட்பாளரை அறிவிக்கவுள்ளனர்.
பிரதமரிடம் நாம் சஜித்தை நியமிக்குமாறு கூறினோம். பொது வேட்பாளரை நியமிப்போம் என பிரதமர் கூறினார். ஒவ்வொரு முறையும் பொது வேட்பாளரை நியமிக்க முடியாது. அதற்கு தகுதியாக இருக்கும் சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.
பொது வேட்பாளர் நியமிக்கப்பட்டால் நாங்கள் கட்சியை விலகி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேறு கட்சியில் இணைவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.